வசதியான பெண்களுக்கே ரூ.1000… பாவப்பட்டவங்களை விட்டுட்டாங்க ; வேதனையில் ஆட்சியரகத்தில் குவிந்த பெண்கள்..!!

Author: Babu Lakshmanan
19 September 2023, 6:39 pm

கன்னியாகுமரி ; வசதி படைத்த பெண்களுக்கே ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் பயனாளர்களாக இணைக்கப்பட்ட ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேரின் நேரடி வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 56 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. அவர்களுக்கு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை குறிப்பிட்டு முதல் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அதன் பின்னர், 30 நாள்களுக்குள் இ சேவை மையம் மூலம் திட்டத்திற்கு மீண்டும் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும், எனவே இந்த வாய்ப்பை நிராகரிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் வசதி படைத்த பெண்களுக்கே ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மீண்டும் விண்ணப்பிக்க வந்த பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலுவலக வாசலிலேயே கணினி அமைக்கப்பட்டு பெறப்படும் விண்ணப்பங்களை ஊழியர்கள் பதிவேற்றம் செய்து வந்தனர்.

அப்போது, வசதி படைத்த பெண்களுக்கே ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ள பெண்கள் குற்றம்சாட்டினர். ஒரு சிலரோ, பணம் பெற்றுக் கொண்டீர்கள் என்று மெசேஜ் வந்துள்ளதாகவும், ஆனால், பணம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

  • Nayanthara unauthorized song usage மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..கேரளாவில் வெடித்த பூகம்பம்..!
  • Views: - 577

    0

    0