கஞ்சா விற்ற உதயநிதி நற்பணி மன்ற நிர்வாகி கைது : ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
18 June 2022, 9:03 am

சென்னை பல்லாவரம் அருகே கஞ்சா விற்பனை செய்த உதயநிதி நற்பணி மன்ற செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேடியல் சாலையில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை அதிகரித்து காணப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கஞ்சா தடுப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார், அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையில் முற்புதரில் மறைந்திருந்த அர்ஜுன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் பல்லாவரத்தை சேர்ந்த உதயநிதி நற்பணி மன்ற செயலாளர் தினேஷை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், அவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?