கப்பு.. கப்பு-னு கஞ்சா புகைக்கும் வீடியோவை வெளியிட்டு WANTED ஆக சிக்கிய இளைஞர்.. மீன்வெட்டும் தொழிலாளிக்கு காப்பு போட்ட போலீசார்..!!
Author: Babu Lakshmanan14 October 2022, 11:43 am
விழுப்புரம் அருகே மீன்வெட்டும் தொழிலில் ஈடுபடும் இளைஞர் கஞ்சா புகைப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞரை கண்டாச்சிபுரம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சார்ந்த சதீஷ் என்ற இளைஞர் கஞ்சா புகைப்பது போன்று வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ பதிவானது வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்தனர்.
விசாரனையில் காசிமேடு பகுதியில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வரும் சதீஷ் கஞ்சா போதைக்கு அடிமையானதும், கஞ்சா புகைத்துவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, கஞ்சா பழக்கம் கொண்ட சதீஷ் என்ற இளைஞரை கண்டாச்சிபுரம் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.