ஆந்திராவில் இருந்து மதுரைக்கு லாரியில் கஞ்சா கடத்தல் : 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது… 254 கிலோ கஞ்சா பறிமுதல்..!!
Author: Babu Lakshmanan11 March 2022, 9:20 am
திருவள்ளூர் : ஆந்திர மாநிலத்திலிருந்து லாரியில் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 254 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட தச்சூர் கூட்ரோடு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சௌந்தரபாண்டி என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், லாரியில் இருந்த மதுரையை சேர்ந்த ஐயர் (55), ஜெயக்குமார் (24), அஜீஸ் முகம்மது (17) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 254 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.