கஞ்சா போதையில் இளைஞர்களுக்குள் தகராறு.. தட்டி கேட்டவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!

Author: Babu Lakshmanan
14 May 2024, 9:51 pm

தர்மபுரியில் கஞ்சா போதையில் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக்கேட்டவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த எஸ் பட்டி கிராமத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு முன்பு, நான்கு இளைஞர்கள் கஞ்சா போதையில் தகராறு செய்ததாகவும், அவதூறாக ஆபாசமான வார்த்தைகளை பேசி பிரச்சனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பாஜகவுக்கு 100 இடங்கள் கூட கிடையாதாம்…பாமகவை அவர்களின் ஆன்மா மன்னிக்காது ; செல்வப்பெருந்தகை!!

சின்னதுரைக்கு கல்லூரி செல்லும் பருவத்தில் ஒரு பெண் உள்ளதால், தன் வீட்டின் முன்பு இது போன்று செயல்களில் ஈடுபட வேண்டாம் என கஞ்சா போதையில் இருந்த இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார். பிறகு சின்னதுரையையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிய கஞ்சா போதையில் இருந்த இளைஞர் ஒருவர் சின்னதுரையிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்து, பின்பு சின்னதுரையை அந்த இளைஞர் கொடுவாளால் தாக்கியுள்ளார்.

அப்போது தலை மற்றும் கை உள்ளிட்ட உடல் பாகங்களில் வெட்டு காயம் ஏற்பட்டன. கஞ்சா போதையில் இருந்த இளைஞரை தள்ளிவிட்டு இருவரும் உருண்டு பிரண்டு உள்ளனர். பின்பு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்கள் சின்னதுரையை மீட்டு, இதனை தொடர்ந்து அரூர் அரசு மருத்துவமனையில் சின்னதுரை சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தங்கள் கிராமத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக தெரிவித்து எஸ்.பட்டி கிராம மக்கள் அரூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால் உரிய நடவடிக்கை எடுத்து கஞ்சா விரும்புவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!