காஞ்சிபுரம் ; காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயருக்கும், மக்களுக்கும் மிரட்டல் விடுத்த திமுக கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளும் மற்றும் கழிவு நீரும் லாரிகள் மூலம் காஞ்சிபுரம் அருகே திருக்காளிமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் குப்பை கிடங்கில் சென்று கொட்டுவது வழக்கம்.
மாநகராட்சியின் 22 வது வார்டு கவரைத் தெரு வழியாக குப்பை மற்றும் கழிவுநீர் லாரிகள் ஏற்கனவே சென்று வந்தது. இந்தப் பகுதியில் ஒரு சிறுமி உட்பட இரண்டு பேர் கழிவு நீர் லாரி மற்றும் குப்பை லாரி மோதி ஏற்கனவே இறந்துவிட்டனர். இதனால், இந்த குப்பை கிடங்குக்கு 22 வது வார்டில் உள்ள கவரை தெரு வழியாக லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு அந்த தெருவின் கடைசியில் மாநகராட்சி ஆணையர் மூலம் இரும்பு கேட் அமைக்கப்பட்டு வெல்டிங் ராடு மூலம் சீல் வைக்கப்பட்டது.
இதனை மாநகராட்சியில் பணிபுரியும் ஒரு சில சுகாதார ஆய்வாளர்களின் உதவியுடன் சிலர் அவ்வப்போது, வெல்டிங் வைக்கப்பட்ட ராடை உடைத்து விட்டு கேட்டை திறந்து அந்த வழியாகவே குப்பை மற்றும் கழிவு நீர் லாரிகளைக் கொண்டு செல்கின்றனர்.
அவ்வப்போது சீல் வைக்கப்படுவதும் அதை உடைத்து விட்டு லாரிகள் செல்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மேலும் குப்பைகள் சாலை முழுவதும் கொட்டிக்கொண்டே செல்வதனாலும், கழிவுநீர் சாலையில் ஒழுகி கொண்டே செல்வதனாலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் ஆவேசப்பட்டு 22வது வார்டின் மாமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயருமான குமரகுருநாதன் அவர்களுடன் சேர்ந்து கொண்டு கேட்டு முன்பு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனை கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த திமுக கட்சியின் 2வது பகுதி கழக செயலாளரும், 25வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மண்டலக்குழு தலைவருமான சந்துரு என்பவர் வெல்டிங் வைத்து சீல் வைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டனை உடைத்து தள்ள முயன்றார்.
மேலும், மறியலில் ஈடுபட்டிருந்த துணை மேயர் உள்ளிட்ட பகுதி மக்களையும் சேர்த்து கண்டமேனிக்கு பேசி மிரட்டல் விடுத்தார். துணை மேயரை பார்த்து நீ எப்படி இந்த பதவியில் நீடிக்கின்றாய் பார்த்து விடுவோம் என சவால் விட்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் லாரிகளை இந்த சாலை வழியாக அனுப்பக் கூடாது என மக்களோடு மக்களாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டிருந்த துணை மேயரை, திமுக உறுப்பினர் ஒருமையில் பேசிய எச்சரிக்கை விடுத்த செயல் காங்கிரசுக்கும், திமுகவுக்கும் ஏழாம் பொருத்தம் நிலவி வருகிறது என்பதை நிரூபித்தது.
இந்த சந்துரு என்பவர் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த திமுக கட்சியின் கூட்டத்தில் பெண்கள் முன்னிலையில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் பபிதாவை கெட்ட வார்த்தையால் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
This website uses cookies.