கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அவரது தாயின் தகாத உறவு காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்துள்ள காயக்கரையை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது மாமன் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. துணிக் கடையில் வேலை பார்த்து வந்த அந்த இளம்பெண், சில நாட்களில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
பின்னர், நாகர்கோவிலில் ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது கணவரையும் பிரிந்த அந்த இளம்பெண், மணலிகரையைச் சேர்ந்த ஆத்து கோணம் சுனில் என்பவருடன் காட்டாத்துறை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
அவர்களுடன் முதல் கணவர் மூலம் பிறந்த 11 வயது சிறுமியும் வசித்து வந்தார். அந்தச் சிறுமியிடம் அவரது தாய் இல்லாத நேரத்தில் சுனில் தவறாக நடந்து உள்ளார். இளம்பெண் வேலைக்குச் சென்றதும் வீட்டில் இருந்த 11 வயது சிறுமியை 3 நாட்களாக சுனில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், இதனை வெளியில் யாரிடமாவது கூறினால், உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இருப்பினும், உடலில் வலி எடுத்ததால் சுனிலின் பாலியல் தொந்தரவு குறித்து தனது பாட்டியிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
இதுகுறித்து அவரது பாட்டி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை தேடி வருகின்றனர்.
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
This website uses cookies.