குமரி கடலில் கடல் சீற்றம்… மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை… 4000 படகுகள் கரையில் நிறுத்திவைப்பு..!!

Author: Babu Lakshmanan
2 August 2022, 7:17 pm

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் சூறை காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டதால், மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது. அதோடு, அரபிக்கடல் பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படும் எனவும் எச்சரித்திருந்தது.

அதேப்போல், அரபிக்கடல் பகுதியில் சூறை காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்ட நிலையில், அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்த கேரளா அரசு வரும் 5-நாட்களுக்கு கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடையும் விதித்தது.

குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 4000க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அதேப்போல் 2 மாத தடை காலத்திற்கு பின் நேற்று முதல் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற 500-க்கும் மேற்பட்ட விசை படகுகளும் கரை திரும்பியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 1080

    0

    0