கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே இளம் காதல் ஜோடிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் வடசேரி பஸ் நேற்றிரவு 11 மணியளவில் நெல்லை பஸ்கள் நிற்கும் பிளாட்பாரத்தில் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சிவன்கோயில் தெருவை சேர்ந்த அஜித்குமார் (22) மற்றும் பிரீத்தி (20) என்பது தெரியவந்தது. மேலும் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அஜித்குமாரும், பிரீத்தியும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள்.
ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 2 பேரும் கடந்த 4 ம்தேதி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் 2 பேரும் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். கன்னியாகுமரியில் லாட்ஜில் தங்கி உள்ளனர். எங்கு செல்வது என தெரியாமல் இருவரும் தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்தது தெரிய வந்தது.
தற்போது இவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் வந்ததும் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறினர்.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…
குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…
This website uses cookies.