தோழிகளை அழைத்து பங்களா வீட்டில் மதுவிருந்து.. போதை தலைக்கேறிய பிறகு நண்பர்களுடன் உல்லாசம் : கிப்டியின் அதிரும் பின்னணி..!!!

Author: Babu Lakshmanan
22 August 2022, 2:31 pm

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சக தோழிகளை மது விருந்துக்கு அழைத்து போதையில் ஆண் நண்பர்களுக்கு கிப்ட் ஆக்கிய கிப்டியை கையும் களவுமாக பிடித்த முன்னாள் காதலன் மண்டையை உடைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த “கிப்டி” என்ற ஜாபியா ஜாஸ்மின். இவர் மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருக்கும் போது குளச்சல் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது :- நான் குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு எனது ஆண் நண்பர்கள் ஆகாஷ், மணிகண்டன், கல்லூரி தோழிகள் அல்பியா, மெஜினா ஆகியோருடன் எனது பிறந்தநாள் பார்ட்டிக்காக தயாராகி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே வந்த எனது பள்ளி தோழன் சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்த அஜின் வீட்டிற்குள் புகுந்து எனது நண்பர்களை கம்பால் தாக்கி விரட்டியதோடு, என்னையும் மண்டையில் கட்டையால் அடித்து மண்டையை உடைத்து விட்டு தப்பியோடிவிட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் புகாரளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குளச்சல் போலீசார் தாக்குதல் நடத்தி தப்பியோடிய அஜின் ஐ தேடி வரும் நிலையில், சம்பவம் நடந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்த போது, புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், ஆங்காங்கே வீசப்பட்டு கிடந்த ஆடைகள் மற்றும் ஆணுறைகளை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் “கிப்டி” குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

20-வயதான கிப்டி கருங்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில், தனது பள்ளி தோழனான அஜின்-ஐ கடந்த 6-வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

காதலனுடன் பைக்கில் டிரிப் அடித்து பகலில் சந்தோஷமாக சுற்றி வரும் கிப்டி, இரவில் காதலனுக்கு தெரியாமல், தான் வசிக்கும் பங்களா வீட்டிற்கு வேறு சில ஆண் நண்பர்களையும், தோழிகளையும் அழைத்து மது விருந்து கொடுத்து, ஆண் நண்பர்களுடன் அறையில் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தோழிகளையும் மதுவுக்கு அடிமையாக்கி, ஆண் நண்பர்களுக்கு கிப்ட் ஆக்கி கிப்டியின் வாழ்க்கை வேறு பாதையில் சென்றுள்ளது.

இதை அறிந்த காதலன் அஜின் கிப்ட்டியை கண்டித்த நிலையில், “வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா..? என்னை நம்பாதே, என்னைப்போல் நீயும் என்ஜாய் பண்ணு,” என்று பேசிய கிப்டி அஜினின் காதலை பிரேக்அப் செய்துள்ளார்.

இந்த நிலையில், தான் கிப்டி வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் தனது பெரியப்பாவின் பங்களா வீட்டில் மது விருந்துடன் உல்லாசமாக இருப்பதை அறிந்து, அந்த வீட்டிற்கு சென்ற அஜின் பங்களா வீட்டின் அருகே நின்ற மரத்தில் மளமளவென ஏறி மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது கிப்டி மற்றும் அவரது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்கள் மது போதையில் அரைகுறை ஆடையில் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜின் அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து ஆவேசமாக அறைக்குள் சென்று, அரைகுறை ஆடையில் இருந்த கிப்டியின் நண்பர்களை ஓடஓட விரட்டியதோடு, கிப்டியின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்து மண்டையை உடைத்துள்ளார்.

கிப்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட அஜின், அங்கிருந்து தப்பியோடிய விபரமும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அஜின் ஐ தேடி வரும் நிலையில், கிப்டியின் ஆண் நண்பர்கள் குறித்தும், கிப்டியால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் குறித்தும், விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும், அஜின் தாயார் கிப்டியால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், தனது மகன் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால், அந்த ஆதாரங்களை வெளியிடுவேன் என பேசியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் குமுறலுடன் அஜினின் தாயாருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ஆடியோவும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பிள்ளைகள் தோழிகளின் அழைப்பை ஏற்று இரவு பெற்றோருக்கு தெரியாமல், தோழிகள் ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டால், என்ன மாதியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி என எச்சரிக்கின்றனர் போலீசார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1380

    0

    0