துறைமுக பொழிமுகத்தில் மீனவர்கள் போராட்டம்… மீன்களை ஏற்ற வந்தவர்கள் துரத்தியடிப்பு ; பொருட்களை தூக்கி வீசியதால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
16 August 2022, 4:51 pm

கன்னியாகுமரி : தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக பொழி முகத்தில் தொடர் உயிர் பலி ஏற்படுவதை தடுக்கக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு பிரிவினர் மீன்களை ஏற்ற வந்ததால், அவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்கப்பட்டினம் மீன் பிடி துறைமுக பொழி முகத்தில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு இதுவரையிலும் 27 பேர் பலியாகி உள்ளனர். எனவே, உயிர் பலி ஏற்படுவதை தடுக்கவும், உடனே துறைமுக மறு சீரமைப்பு செய்ய கேட்டும் , பொழி முகத்தில் தேங்கி உள்ள மணலை அள்ளக்கோரியும் மீனவர்கள் துறைமுகத்தின் உள் கடற்கரை பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே, ஒரு பிரிவினர் மீன்கள் ஏற்ற வந்தவர்களை துரத்தி அடித்தனர்.

இதனால் இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மீன் கூடை உட்பட பொருட்களை தூக்கி வீசினர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

  • Tamannaah marriage rumors கல்யாணத்தை குறிவைக்கும் தமன்னா.. 35 வயதில் எடுத்த திடீர் முடிவு..!
  • Views: - 866

    0

    0