தடை செய்ய புகையிலைப் பொருட்கள் விற்பனை : 2 பெண்கள் கைது.. 10 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!!
Author: Babu Lakshmanan5 August 2022, 6:36 pm
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக இரண்டு பெண்களை கைது செய்து சிறையிலடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் அந்த பகுதியில் உள்ள கடைகளை திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, இரணியல் சாலையில் அமைந்துள்ள இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த கடைகளின் உரிமையாளர்கள் குளோரி மற்றும் விலாஷினி ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 10 கிலோ நச்சு புகையிலைகளை பறிமுதல் செய்ததோடு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.