கன்னியாகுமரி அருகே காதல் டார்ச்சரை தாங்க முடியாத இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர். இவரது மகள் திவ்யா (20). இவர் மார்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ முடித்து விட்டு உயர்கல்வி படிப்பிற்காக காத்திருந்து வருகிறார். சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் திவ்யாவை காதலித்து வந்து உள்ளார். திவ்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காதலை தொடராமல் திவ்யா ரஞ்சித்தை பிரேக்கப் செய்துள்ளார். ஆனாலும் ரஞ்சித் செல்போன் மூலம் அழைத்தும் தொடர்ந்து திவ்யாவை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும், ரஞ்சித்துடன் திவ்யா சேர்ந்து காதல் ஜோடி போல இருப்பது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வளைதளங்களில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, திவ்யா வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரஞ்சித்தின் டார்ச்சர் தொடரவே, இது சம்பந்தமாக குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து, இரண்டு தரப்பும் சமரசமாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில், மீண்டும் கடந்த வாரம் திவ்யாவை ரஞ்சித் பின்தொடரவே, ஆத்திரமடைந்த திவ்யாவின் சகோதரன் றோசன் மேத்யூ, அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரஞ்சித்திடம் சென்று தட்டிக்கேட்டனர். மேத்யூ மற்றும் அவரது நண்பர்களை ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ள நிலையில், மனமுடைந்து காணபட்ட திவ்யா நேற்று வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த மார்தாண்டம் போலீசார் உடலை கைபற்றி உடல் கூறு ஆய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக திவ்யாவின் பெற்றோர்கள் மகள் மரணத்திற்கு காரணமான ரஞ்சித் உட்பட நண்பர்களை கைது செய்ய கேட்டு புகார் அளித்துள்ளனர்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.