பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கவில்லை : குமரியில் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் போராட்டம்!!!
Author: Babu Lakshmanan21 January 2022, 12:41 pm
கன்னியாகுமரி : பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்காததை கண்டித்து ஒழுகினசேரி ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு பல்வேறு ரேஷன் கடைகளில் முறையாக வழங்கவில்லை. இந்த பரிசு தொகுப்பு பல ரேஷன் கடைகளில் பொங்கல் முடிந்த பின்னரும் வழங்கப்பட்டது. அதேபோல், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றை எனவும் மாவட்டத்தில் பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இன்று நாகர்கோவில் அடுத்துள்ள ஒழுகினசேரி ரேஷன் கடை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் ஒன்று திரண்டு பொங்கல் பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.