கட்டிலுக்கு அடியில் கேமராவை திருப்பு… கணவனுக்கு எழுந்த சந்தேகம் : வீடியோ காலில் மனைவி செய்த செயலால் காத்திருந்த அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
10 August 2022, 11:18 am

கன்னியாகுமரி : வெளி நாட்டில் வேலை செய்யும் கணவருடன் வாட்ஸ்அப்பில் வீடியோ காலில் பேசும் போது தகராறு ஏற்பட்டதால் மனைவி விபரீத முடிவை எடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் ஞானபாக்கியபாய் (33). இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் கணவர் செந்தில் சிங்கப்பூரில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் தூங்க வைத்து விட்டு கணவர் செந்திலுடன் மனைவி வாட்ஸ் அப்பில் வீடியோ கால் மூலம் பேசி இருக்கிறார். பேசி கொண்டிருக்கும் போதே, கணவன் மணைவி இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, கேமராவை கட்டிலுக்கு அடியில் திருப்பு என்றெல்லாம் செந்தில் கூறியதாக சொல்லப்படுகிறது.

கணவர் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி கொண்டு இருக்கும் போதே மனைவி தூக்கு மாட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த செந்தில் கொட்டாரத்தில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கூறி இருக்கிறார். உடனே உறவினர்கள் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது ஞானபாக்கியபாய் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்திருக்கிறார்.

தகவல் அறிந்து வந்த கன்னியாகுமரி போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 987

    0

    0