கன்னியாகுமரி பாஜக கவுன்சிலர் கைது.. வழக்கறிஞர் அளித்த பரபரப்பு புகார் : போலீசார் நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2023, 12:32 pm

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய பா.ஜனதா கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சுபாஷ் (வயது 32). இவர் பா.ஜனதா மாவட்ட ஐ.டி. பிாிவு நிர்வாகியாக உள்ளார்.

இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோவை சமூக வலைத்தளமான முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தி.மு.க. வக்கீல் கோடீஸ்வரன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?