கார் சர்வீஸ் நிலையத்தில் அத்துமீறி நுழைந்த கும்பல்: முகமூடி நபர்களை தேடும் போலீஸ்..!

Author: Vignesh
7 November 2022, 6:05 pm

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கார் சர்வீஸ் நிலையத்தில் நள்ளிரவில் முகமூடி அணிந்து அத்துமீறி புகுந்த கும்பல், கேமராக்கள் பொருள்கள் அடித்து உடைப்பு. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நேசமணி நகர் போலீசார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பால் பண்ணை சந்திப்பு அருகே பிஜு என்பவருக்கு சொந்தமான வாகன பழுது பார்ப்பு மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மையத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக பிஜுவுக்கும் கட்டிடத்தின் உரிமையாளருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனை நிலவி வருவதாக கூறப்படுகிறது.

theft - updatenews360

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு கும்பல் இந்த மையத்திற்குள் முகத்தை மூடி வந்து, சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்து விட்டு மையத்திற்குள் இருந்த
கண்ணாடி மற்றும் உபகரணங்கள் என பல்வேறு பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. சம்பவம் தொடர்பாக பிஜு நேசமணி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது உள்ளே புகுந்த கும்பலை சேர்ந்தவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து முன்னெச்சரிக்கையாக தங்கள் அடையாளங்களை மறைத்து வந்ததால் போலீசார் அந்த கும்பலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  • Ajith's Son Advik Wins Go Kart Race குட்டி ரேஸர் ரெடி…சென்னையில் நடந்த போட்டியில் மாஸ் காட்டிய அஜித் மகன்…!