வழக்கை முடிக்க ரூ.5 லட்சம் லஞ்சம்…பணக்கட்டுடன் கைதான குமரி டிஎஸ்பி: 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு..!!

Author: Rajesh
6 April 2022, 4:28 pm

குமரி: வழக்கை முடிக்க ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கி கைதான மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்கவேலுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம். இவர் டெக்ஸ்டைல் தொழில் அதிபராக உள்ளார். இந்நிலையில், அவருக்கும் வேறு ஒருவருக்கும் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை முடித்து வைப்பதற்காக சிவகுரு குற்றாலத்திடம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிவகுரு குற்றாலம் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் சிவகுரு குற்றாலம், ஐந்து லட்ச ரூபாயை டிஎஸ்பி தங்கவேலுவிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரைப் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சிறையில் ஆஜர்படுத்தபட்ட டிஎஸ்பியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி