அய்யோ.. உசுரு போயிருச்சே.. குளிக்க சென்ற மாணவன் குளத்தில் மூழ்கி பலி; கதறி அழுத நண்பர்கள்..!

Author: Vignesh
5 August 2024, 7:33 pm

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பொறியியல் கல்லூரி மாணவன் குளத்தில் மூழ்கி பலி நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் குளத்தின் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் சுமார் 6-மணி நேர தேடுதலுக்கு பின் தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றி குளச்சல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் பெனில் (19) இவர் தாய் தந்தையை இழந்த நிலையில், உறவினர்கள் உதவியால் மார்த்தாண்டம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியில் உள்ள சக வகுப்பு மாணவன் வினித்ராஜ் வீட்டிற்கு வந்த பெனில் அருகே உள்ள கரையாக்குளத்திற்கு சக நண்பர்கள் 5-பேருடன் குளிக்க சென்றுள்ளார்.

சக நண்பர்களுடன் உற்சாகமாக குளித்த பெனில் குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி செல்ல முயன்றுள்ளார். குளத்தின் நடுபகுதிக்கு சென்ற அவர் மூச்சு திணறி நீந்த முடியாததால் திடீரென நடு குளத்தில் மூழ்கி மாயமானார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 10-பேர் ரப்பர் மிதவைகளின் உதவியுடன் கம்பால் குளத்தில் மாயமான பெனிலை தேட தொடங்கினர். சுமார் 6-மணி நேர தேடுதலுக்கு பின் அவரை சடலமாக மீட்டு கரை சேர்த்த நிலையில், சடலத்தை கைப்பற்றிய குளச்சல் போலீசார் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய் தந்தையை இழந்த கல்லூரி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!