துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

Author: Selvan
25 March 2025, 9:56 pm

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை

உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான் தனது டி20 லீக் போட்டியான பிஎஸ்எல் தொடருக்கான தீவிரத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படியுங்க: பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

பாகிஸ்தானில் ஏப்ரல் 11 முதல் தொடங்கவுள்ள பிஎஸ்எல் 10வது சீசனில்,கராச்சி கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் அந்த அணியின் கேப்டனாக பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் ஷான் மசூத் இருந்தார்.2020ஆம் ஆண்டு பிஎஸ்எல் கோப்பையை வென்ற கராச்சி கிங்ஸ்,அதன்பின் அதிகமான தோல்விகளை சந்தித்து வந்துள்ளது

இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பைக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னரை,2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிலீஸ் செய்தது.அதன் பிறகு எந்த அணியும் அவரை தேர்வு செய்யாததால்,அவர் ஐபிஎல் 2025 தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து,பிஎஸ்எல் டிராஃட்டில் கலந்து கொண்ட வார்னரை,கராச்சி கிங்ஸ் அணி தேர்ந்தெடுத்து கேப்டனாக நியமித்துள்ளது.

இதன் மூலம்,டேவிட் வார்னர் ஐபிஎல் லீக்கில் இருந்து,பிஎஸ்எல் தொடருக்கு ஆட இருக்கிறார்,இவரின் வருகை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Nayanthara to walk out of Mookuthi Amman 2 மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா விலகல்? பதறிய குஷ்பு!
  • Leave a Reply