விஜயை நம்பி வந்தோம்.. மொத்தமும் வேஸ்ட் : தவெக வழக்கறிஞர்கள் அணி கூண்டோடு விலகல்!
Author: Udayachandran RadhaKrishnan7 January 2025, 6:05 pm
விஜயை நம்பி கட்சிக்கு வந்தோம். ஆனால் உரிய அங்கீகாரம் இல்லை என தவெக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் அணி கூண்டோடு விலகியுள்ளது.
தவெக கட்சியில் இருந்து காரைக்காலை சேர்ந்த வழக்கறிஞர்கள் விலகியுள்ளனர். காரைக்காலில் உள்ள கட்சி நிர்வாகிகள் செயல்பாடு இல்லாத காரணத்தினால் உறுப்பினர் சேர்க்கைக்கான கடிதங்களை அவர்கள் கிழித்து எரிந்தனர்.
இதையும் படியுங்க: ஓடும் காரில் தீ… மைனர் சிறுமியுடன் உடல் கருகி பலியான வாலிபர் : விசாரணையில் ஷாக்!!
தளபதி விஜய்யை நம்பி கட்சிக்கு வந்ததாகவும் ஆனால் உள்ளூர் நிர்வாகிகள் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடவில்லை..உரிய அங்கீகாரம் வழங்கவில்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
வழக்கறிஞர்களை தொடர்ந்து மேலும் பலர் தவெக கட்சியில் இருந்து விலக இருப்பதாக தெரிகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்தின் சொந்த ஊரான புதுச்சேரியில் இருந்து பலரும் வெளியேறுவது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது