கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப் போகும் காங்கிரஸ்..? தமிழகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டம்..!!

Author: Babu Lakshmanan
13 May 2023, 12:38 pm

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில், பாஜகவை பின்னுக்கு தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சி அதிமுக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது உள்ளது.

இதனை கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களின் மகிழச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொது மக்களுக்கு நன்றி என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோன்று பாஜகவிற்கு எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி