கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில், பாஜகவை பின்னுக்கு தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சி அதிமுக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது உள்ளது.
இதனை கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களின் மகிழச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொது மக்களுக்கு நன்றி என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோன்று பாஜகவிற்கு எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.