கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது…விசா முறைகேடு வழக்கில் அதிரடி: தொடரும் சிபிஐ விசாரணை?

Author: Rajesh
18 May 2022, 9:50 am

சென்னை: கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அவரது ஆடிட்டரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, மும்பை ,சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்ற நிலையில் இதில் எதுவும் சிக்கவில்லை என்று ப. சிதம்பரம் விளக்கமளித்தார்.

சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும், ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது முறைகேடாக விசா பெறப்பட்டிருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவானது. இதனடிப்படையிலேயே நேற்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்தது.

கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய நிலையில் நள்ளிரவில் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைகேடாக விசா வழக்கியது தொடர்பான வழக்கில் நேற்று சிபிஐ சோதனை நடத்திய நிலையில் சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 861

    0

    0