கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்.. ‘பொன்னியின் செல்வன்’ மட்டும் அல்ல ‘சர்தார்’ படத்தின் வேறலெவல் அப்டேட்..!

Author: Vignesh
29 September 2022, 3:00 pm

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் ஒருபடம் கூட ரிலீசாகாமல் இருந்தாலும், இரண்டாம் பாதியில் அவரது ராஜ்ஜியம் தான் என சொல்லும் அளவுக்கு, அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த மாதம் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்த விருமன் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

தற்போது இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் கார்த்தி, வந்தியத்தேவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி நடித்துள்ள மற்றொரு படமான சர்தார் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி சர்தார் படத்தின் டீசர், நாளை வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தோடு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சர்தார் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும், ரெஜிஷா விஜயனும் நடித்திருக்கிறார்கள். சர்தார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!