ஈஷாவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம் : தியானலிங்கத்தின் 24வது ஆண்டு முன்னிட்டு சிறப்பு நாத ஆராதனை!
Author: Udayachandran RadhaKrishnan27 November 2023, 9:01 am
ஈஷாவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம் : தியானலிங்கத்தின் 24வது ஆண்டு முன்னிட்டு சிறப்பு நாத ஆராதனை!
கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ 26) ஒட்டுமொத்த ஈஷாவும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளியால் பிரகாசித்தது.
ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, சூரிய குண்டம், நந்தி, ஆதியோகி உள்ளிட்ட இடங்களில் ஈஷா தன்னார்வலர்களும், பொதுமக்களும் அகல் விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும், சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியானலிங்கம் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 24-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு நாத ஆராதனையும் நடைபெற்றது.
லிங்கபைரவி சந்நிதியில் பெளர்ணமி அபிஷேகமும், அதை தொடர்ந்து நந்தி முன்பு லிங்கபைரவி மஹா ஆரத்தியும் நடைபெற்றது.