பிரபாகரனுடன் சீமான் புகைப்படம் எடுத்தது உண்மைதான், ஆனால் இது கிராஃபிக்ஸ் போட்டோ என கரு.அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது என்றும், அதனை எடிட் செய்து கொடுத்ததே தான் என்றும் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பூதாகரமான நிலையில், இது தொடர்பாக பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பிரபாகரனின் அண்ணன் மகனான மனோகரன், எல்லாளன் திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் சீமான் – பிரபாகரன் சந்திப்பு குறித்து பேசியது விவாதத்தைக் கிளப்பியது.
அதேநேரம், சீமானும் இதற்கு தொடர்ந்து பதிலளித்து வருகிறார். இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக அறியப்படும் கரு.அண்ணாமலை, தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து உள்ளார்.
அதில், “சீமான் ஈழத்துக்குச் சென்றது உண்மை. ஆனால், பல நாட்கள் காத்திருந்து பிரபாகரனை பார்க்க சீமான் முயன்றார். அனுமதி மறுக்கப்பட்டதால், கொளத்தூர் மணி மூலமாக அவரைச் சந்தித்தார். பிரபாகரன் உடன் சீமான் புகைப்படம் எடுத்தது உண்மை. ஆனால், அது இந்தப் போட்டோ இல்லை. இது கிராஃபிக்ஸ்.
தமிழகத்தில் இருந்து பிரபாகரனைச் சந்திக்கச் சென்ற தலைவர்கள் பலர், படகில் சென்றனர். ஆனால், சீமான் அப்படி படகில் செல்லவில்லை. இரண்டு முறை கோடியக்கரையில் இருந்து படகில் இலங்கைக்கு பயண ஏற்பாடு செய்த நிலையில், வாந்தி வந்ததால் அவ்வாறு செல்லவில்லை.
எனவே, பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து சீமான் சென்றார். மற்றவர்களை அழைத்தது விடுதலைப் புலிகள். ஆனால், சீமானை அழைத்தது விடுதலைப் புலிகளின் கிளையான கலை பண்பாட்டுத்துறை தான். அதன் பொறுப்பாளரான சேரலாதன் அழைப்பின் பேரில் தான் சீமான் சென்றார்.
இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்தவர் வன்னி அரசு. அங்கு சென்றும் பிரபாகரனைப் பார்க்க முடியாத நிலையில், கொளத்தூர் மணியைத் தொடர்பு கொண்டு பேசி, அதன் மூலம் பிரபாகரனைச் சந்திக்க வாய்ப்பு பெற்றார். இந்தச் சந்திப்பு நடந்ததும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே.
அப்போது, சீமான் பிரபாகரன் உடன் போட்டோ எடுத்துக்கொண்டார். பின்னர், அந்த போட்டோ கிடைக்குமா, அதை வாங்கிக்கொடு என சில மாதங்களுக்குப் பிறகு என்னிடம் கேட்டார். அப்போது, ஈழப்போர் முடிவை நெருங்கி விட்டது. மேலும், போராளிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று வருகின்றனர்.
இதையும் படிங்க: மாடுகளை விற்று மாடர்ன் டாய்லெட்.. உட்ரா வண்டிய போலீஸ் ஸ்டேஷனுக்கு.. சீர்காழி கல்யாண ராணி சிக்கியது எப்படி?
இனி போட்டோ கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறினேன். கிராபிக்ஸ் செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் சீமானிடம் சொன்னேன். அவ்வாறு சொன்ன நான்காவது நாளில் கிராஃபிக்ஸ் செய்த போலியான போட்டோவை வெளியிட்டார் சீமான்.
இதனையடுத்து, இயக்குநர் களஞ்சியத்திடம் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த புகைப்படம் போலி எனக் கூறினேன். இது கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட போலியான போட்டோ என்பது களஞ்சியத்துக்குத் தெரியும். இப்போது மூன்று நாட்களுக்கு முன்பும் குறுஞ்செய்தியில் களஞ்சியத்திடம் சொன்னேன். ஆனால், அதற்குப் பதில் இல்லை. பணம் ஒன்று தான் சீமானுக்கு ஒரே குறிக்கோள். சங்ககிரி ராஜ்குமார் சொன்னதும் உண்மை தான்” என அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
This website uses cookies.