கருணாநிதியால் கச்சத்தீவு போயிடுச்சு… இப்போ காவிரியை தாரை வார்க்க CM ஸ்டாலின் முயற்சி : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 July 2023, 7:46 pm

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தனியார் அமைப்பின் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “மதுரையில் நூலகம் வேண்டும் என மக்கள் யாரும் கேட்கவில்ல. மதுரையில் மேம்பாலம், குடிநீர், சாலை வசதி வேண்டும் மக்கள் கேட்கிறார்கள்.

அதிமுக ஆட்சி காலத்தில் மதுரைக்கென அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது, ஜல்லிக்கட்டு வாடிவாசல் என்பது மண் வாசனை நிறைந்தது, ஆனால் ஜல்லிகட்டு மைதானம் எதற்காக கட்டி வருகிறார்கள் என தெரியவில்லை.

நூலகம் கட்ட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அத்தியாவசிய திட்டங்கள் முதலில் செய்ய வேண்டும், தமிழகத்தில் காய்கறிகள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

தக்காளி, வெங்காயகம் இல்லாமல் பெண்கள் வீடுகளில் குழம்பு வைக்க முடியவில்லை, காய்கறி உள்ளிட்ட விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், முதல்வர் செயலற்று முடங்கி போய் உள்ளார், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது, மு.க.ஸ்டாலின் ராஜ்ஜியத்தில் மக்களுக்கு பூஜ்யம் தான் கிடைத்து இருக்கிறது.

தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக இருக்கிறார்கள், டிஐஜி விஜயகுமார் கடும் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

அதிமுக ஆட்சியில் சட்ட போராட்டம் நடத்தி காவிரி உரிமை நிலைநாட்டி இருக்கிறார், கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்ததது போல காவிரியை ஸ்டாலின் தாரை வார்க்க பார்க்கிறார்.

காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தில் திமுக எந்தவொரு நடவடிக்கைகள் எடுக்கவில்லை, அமைச்சர் பொன்முடி வழக்கில் 10 ஆண்டுகள் வாய்தா வாங்கினார்.

திடீரென வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டு உள்ளார். பொன்முடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்பி உள்ளது, அமலாக்கத்துறை சோதனையை பொன்முடி சட்டப்படியாக எதிர்க்கொள்ள வேண்டும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பொன்முடி தெரிந்து கொள்ள வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் என்பதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமுமில்லை, எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் என்பதை தேர்தல் ஆணையம் உறுதிபடுத்தி உள்ளது.

நிர்வாகம், வளர்ச்சி, திட்டங்களில் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கிறது, அதிமுக ஆட்சி தொலைநோக்கு பார்வையுடன் நடைபெற்றது என கூறினார்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 301

    0

    0