கம்பீரத்துடன் கூடிய கவனம் ஈர்த்த ‘கருப்பணசுவாமி’ சிலை.. 80 டன் எடையில் ஒரே கல்லில் வடித்து சிற்பிகள் அபாரம்..!
Author: Vignesh5 August 2024, 11:32 am
பழனியில் 80 டன் எடை கொண்ட கல்லை குடைந்து செய்யப்பட்ட பிரம்மாண்ட கருப்பணசாமி சிலை- விருதுநகரில் உள்ள கோயில் பிரதிஷ்டி செய்ய லாரியில் ஏற்றி எடுத்து செல்லப்பட்டது.
பழனி மலை அடிவாரத்திற்க்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து 80 டன் எடை கொண்ட பெரிய கல் கொண்டு வரப்பட்டு சிலை செய்யும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்றது.
சிற்பக் கலைஞர்கள் இணைந்து 17 அடி உயரத்தில் கருப்பணசாமி சிலையை செய்யும் பணியில் ஈடுபட்டனர். சிலை செய்யும் பணி நிறைவடைந்ததை அடுத்து விருதுநகரில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரம்மாண்டமான கருப்பணசாமி சிலையை லாரியில் ஏற்றி எடுத்துச் செல்லும் பணி இன்று நடைபெற்றது. பெரிய கயிறுகளைக் கட்டி கிரேன் இயந்திரம் மூலம் சிலையை தூக்கிச் சென்று லாரியில் ஏற்றினர். கருப்பண்ணசாமி சிலையை லாரியில் ஏற்றிச் செல்வதை காண ஏராளமான திரண்டு ஆச்சர்யத்துடன் பார்வையிட்டனர்.