விஷவாயு தாக்கி 3 பேர் பலி… பேச்சுவார்த்தையின் போது இளைஞர்களுக்குள் மோதல்.. அடித்து அப்புறப்படுத்திய போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
16 November 2022, 4:22 pm

கரூர் : கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய உயிரிழந்தவர்களின் உடலை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையின் போது ரகளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடித்து அனுப்பினர்.

கரூர் சுக்காளியூர் பகுதியில் நேற்று புதிதாக கட்டிய கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கிய மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் ஒருவரின் உடல் வாங்கப்பட்ட நிலையில், இருவர் உடல் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, இளைஞர்கள் வாக்குவாதம் ஏற்பட்டு அடித்து கொண்டனர். அவர்களை போலீசார் தாக்கி அப்புறப்படுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. புதிய கழிவு தொட்டியில் உயிரிழந்த மோகன்ராஜ் சிவக்குமார் சிவாகரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வைக்கப்பட்டுள்ளது, அரசு நிவாரண வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் பேச்சுவார்த்தையில் சிவாவின் உடல் பெற்றுக்கொண்டனர். இருவர் உடல் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த இளைஞர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மது போதையில் இருந்த இளைஞர்களை போலீசார் தாக்கி மருத்துவமனையில் இருந்து அப்புறப்படுத்திய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!