மாணவிகளின் பிரேத பரிசோதனையில் இவ்வளவு அவசரம் ஏன்..? அதுவும் டிஎஸ்பி கையெழுத்து போடக் காரணம் என்ன..? சந்தேகத்தை கிளப்பும் பாஜக!

Author: Babu Lakshmanan
17 February 2023, 3:39 pm

கரூர் : மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் உடலை அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை ஏன்..? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

பா.ஜ.க கவுன்சிலர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி.,யிடம் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேட்டியளித்ததாவது :- கரூர் மாவட்ட அளவில் மதுக்கள் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகின்றன. கஞ்சா விற்பனையும் அதிகரிப்பதால் கொலை, கொள்ளை சம்பவங்களும் அதிகரிக்கின்றன. ஆகவே, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகவும், பொதுமக்களின் நலனுக்காக பாஜக போராடி வரும் நிலையில், பாஜக நிர்வாகிகள் மீது போலீஸார் பொய் வழக்கு போடுகின்றது.

மாயனூர் காவிரி ஆற்றில் மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் குளித்தலை டிஎஸ்பி, பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்காமல், அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை செய்வதற்கு என்ன காரணம்..?, அதுவும், டி.எஸ்.பி கையெழுத்து போட்டு பிரேத பரிசோதனை செய்தது ஏன்..?, கரூர் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் இன்று வரை பணி நியமிக்கப்படாதது ஏன் என்றும் வினா எழுப்பினார்.

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?