வீடு சரிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய 74 வயது மூதாட்டி ; 4 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு காத்திருந்த அதிர்ச்சி
Author: Babu Lakshmanan29 November 2022, 12:36 pm
கரூர் ; அரவக்குறிச்சி அருகே வீடு சரிந்து விழுந்தது உள்ளே மாட்டிக் கொண்ட மூதாட்டியை 4 நேர மீட்பு பணிகளுக்கு பிறகு சடலமாக மீட்டனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில், பழமை வாய்ந்த கட்டிடத்தில் பாத்திமா கவி என்ற (74 வயது) மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவர் இன்று காலை அருகில் உள்ள குப்பை தொட்டியில் குப்பை போட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது வீடு சரிந்து விழுந்ததில் உள்ளே மூதாட்டி மாட்டிக் கொண்டார்.

அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் பொக்லின் இயந்திரம் மூலம் உள்ளே சிக்கி உள்ள முதாட்டியை மீட்பதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டனர்.
மீட்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள். இப்பணிகளில் கரூர் மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையங்களில் சேர்ந்த 25 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணிநேரம் நடந்த மீட்பு பணிகளுக்கு பிறகு மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார்.