அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்… அகற்றப்படாத பிரதமர் மோடி, CM ஸ்டாலின் விளம்பர புகைப்படங்கள்!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 5:58 pm

நாடு முழுவதும் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மோடி மற்றும் ஸ்டாலின் படங்களுடன் கூடிய அரசுத் திட்டங்கள் குறித்த விளம்பர பதாகைகள் அகற்றப்படவில்லை.

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து 1 மணி நேரத்திற்கு மேலான நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் திட்டங்கள் குறித்த பிளக்ஸ் பேனர்கள் விளம்பர பதாகைகள் அகற்றப்படவில்லை. அரசு திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ள விளம்பர பதாகைகள் அகற்றும் பணிகள் இதுவரை துவங்கவில்லை.

இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடி புகைப்படத்துடன் வைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சூரிய ஒளி மின்சார திட்டத்திற்கான விளம்பர பதாகையும் அகற்றவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு வெளியாகும் என்று நேற்றே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ