காலியாக இருந்த அதிகாரிகளின் இருக்கைகள்… தரையில் அமர வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ; கரூர் குறைதீர் கூட்டத்தில் மக்கள் அதிருப்தி!!
Author: Babu Lakshmanan5 September 2022, 9:26 pm
கரூர் ; கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், அதிகாரிகள் இல்லாததால் சோகத்துடன் திரும்பி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழக முழுவதும் திங்கட்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தல் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் அனைத்து திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் அந்த கூட்டத்தில், பொதுமக்களான் மனுக்களை பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, மனுவின் மீது உண்மையாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடபடுவார்கள்.
இந்த நிலையில், இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் மனு அளிக்கும் வளாக இடத்தில் இல்லாததால், அவர்கள் அமர்ந்திருக்கும் சார் காலியாக காணப்பட்டது. பொதுமக்கள் அங்கே வந்து பார்க்கும்போது காலி சேர் மட்டும் இருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்க வந்த நிலையில், போதிய இருக்கைகள் இல்லாததால் தரையில் அமர வைக்கப்பட்டனர். அங்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராததால் மாற்றுத்திறனாளிகளும், காத்திருந்து சோகத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியேறினார்கள்.
சிறிது நேரம் கழித்து வந்த அதிகாரிகள் மனுவை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. காத்திருந்த பலரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியவில்லை என ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.