மனு அளிக்க வந்தவருக்கு திடீர் நெஞ்சுவலி.. ஆம்புலன்ஸ் இல்லாதததால் தீயணைப்பு வாகனத்தில் அழைத்து சென்ற பரிதாபம்… கரூர் கலெக்டர் ஆபிஸில் அவலம்!!

Author: Babu Lakshmanan
21 November 2022, 5:09 pm

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாததால் தீயணைப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாரந்தோறும் திங்கட்கிழமை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் புகலூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்கு உள்ளே வந்துள்ளார்.

தேவராஜ் மனு அளிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். நெஞ்சு வலியால் கீழே விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் ஒரு மருத்துவர் என்பதால், அவரை பரிசோதித்து மருத்துவமனைக்கு அனுப்புமாறு கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதல் உதவி தருவதற்கான ஆம்புலன்ஸ் எதுவும் இல்லாததால், நெஞ்சு வலியால் அவதிப்பட்ட தேவராஜ் தீயணைப்பு துறை வாகன மூலம், கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் நிலையில், ஆயிரம் கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருவது வழக்கம். இப்படியிருக்கையில், ஒரு ஆம்புலன்ஸ் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாமல், தீயணைப்பு துறை வாகனத்தில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அஏற்றி சென்ற சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!