கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், அண்ணாமலை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல், தான் செய்த திட்டங்கள் குறித்து மட்டும் பேசி விட்டு நழுவி சென்றார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம், இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு உறுதிமொழி வாசித்தார்.
ஜோதிமணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கரூர் பாராளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் எம்.பி அப்துல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி கூறியதாவது :- கடந்த தேர்தலின் போது பெற்ற வெற்றியை விட இந்த தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றி பெறுவோம். 1,750 நாட்களில் 972 நாட்கள் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் களப்பணி ஆற்றியுள்ளேன். 300 நாட்கள் மற்ற பகுதிகளில் வேலை செய்துள்ளேன்.
மேலும், 300 நாட்கள் நாடாளுமன்றத்தில் கரூர் தொகுதி, தமிழ்நாட்டு மற்றும் இந்தியாவின் பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளேன். பாஜகவின்
பீ-டீமாக கரூரிலும், தமிழகம் முழுவதும் அதிமுக செயல்படுகிறது, எனக் குற்றம்சாட்டிய ஜோதிமணி, திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.
மேலும், அண்ணாமலை மற்றும் ராகுல்காந்தி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.