காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவிக்காத நிலையில், கரூரின் பல்வேறு இடங்களில் “பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி” என்று எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
திமுக பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதிகளை இறுதி செய்து கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து நிறைவு செய்துள்ளது.
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் இரவு வெளியிடுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது வரை பட்டியல் வெளியாகவில்லை.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக கரூரின் பல்வேறு பகுதிகளிலும், சோனியா காந்தி, தளபதி மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களிப்பீர் என்று சுவர் விளம்பரம் எழுதப்பட்டு வருகிறது. இதனால் கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கண்டிப்பாக ஜோதிமணியே என பொதுமக்கள் பேசி வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.