தவழ்ந்தே வந்து வாக்களித்த 88 வயது மூதாட்டி… தேர்தல் பணியாளர்கள் தாமதமாக உதவியதாக குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
19 February 2022, 4:48 pm

கரூர் மாநகராட்சி தேர்தலில் 88 வயது உடைய மூதாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் ஆற்றிய ஜனநாயகக் கடமை அனைவரையும் பாராட்ட வைத்தது.

சமீப காலமாக கொரோனா 3ம் அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் அரசியல் பிரச்சாரங்களும், வாக்குகள் சேகரிப்பும் நடத்த வேண்டுமென்பது கட்டாயம். இதனை எந்த ஒரு அரசியல் கட்சிகளும் பின்பற்றவில்லை.

கரூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், சமூக இடைவெளி என்பது வெறும் வார்த்தையின் அளவாக தான் இருந்தது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் கரூர் குமரன் நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் 29 மற்றும் 30 ஆகிய இருவார்டுகளுக்கும் வாக்குப்பதிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கும், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெருமளவில் வாக்காளர்கள் சமூக இடைவெளி மறந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அதுமட்டுமில்லாமல், முகக்கவசம் என்பது ஒரு சிலர் அணியாமலும் வந்து வாக்களித்த நிலையில், அதனை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை.

மேலும், பல இடங்களில் பூத் சிலீப் மட்டும் கொண்டே வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில இடங்களில் மட்டுமே, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் கேட்கப்பட்டன.
இந்நிலையில், கரூர் நரசிம்மபுரம் நடுத்தெருவில் வசிப்பவர் 88 வயது உடைய மாரியம்மாள் காளிமுத்து என்கின்ற வயதான பாட்டி, தன்னால் நடக்க முடியாவிட்டாலும், தன்னுடைய வாக்கினை அளித்து ஜனநாயக கடைமை ஆற்ற வேண்டுமென்பதற்காக, ஒரு குச்சியினை கொண்டு ஆங்காங்கே தவிழ்ந்து வந்து பின்னர் வாக்குச்சாவடி மையத்தின் முன்புறம் வந்தார்.

அந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நட்த்தும் அலுவலருமான பிரபுசங்கர், அந்த வாக்குச்சாவடியினை பார்வையிட வந்தார். அவர் வருவதனையறிந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் அப்பகுதியில் முகாமிட, அந்த நேரத்தில் அந்த வயதான மூதாட்டி தவிழ்ந்து வந்ததனை பார்த்த, சில நிருபர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படம் எடுத்ததை பார்த்த கரூர் மாநகராட்சி ஆணையரும், கரூர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மட்டுமில்லாது, தேர்தல் பணியாளர்கள் என்று ஏராளமானோர் அந்த வயதான தவிழ்ந்து வந்த பாட்டிக்கு உதவி செய்து வாக்களிக்க அழைத்து சென்றனர்.

இனி வரும் காலங்களில் முடியாதவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஏதேனும் சிறப்பு சலுகையாக சில மணி நேரம் ஒதுக்கி அவர்களை இல்லத்திற்கு சென்று அழைத்து வந்து அவர்கள் ஜனநாயக கடமை ஆற்றிட உதவிட வேண்டுமென்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தான் தவிழ்ந்து சென்றாலும், சரி, தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக சுமார் 500 அடி தூரம் குச்சியை வைத்து கொண்டு தவிழ்ந்தே வந்து, வாக்களித்த அந்த வயதான பெண்மணியின் ஜனநாயக கடமையை ஆற்றிய செயல் இப்பகுதி மக்களிடையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1497

    0

    0