வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ்… அண்ணாமலை பேனர்களை உடனே அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்.. கரூரில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
2 November 2023, 2:00 pm

கரூர் மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அண்ணாமலை நடைபயண பிளக்ஸ் பேனர் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் “என் மண் – என் மக்கள்” நடை பயண பிரச்சார பேனர் வைக்கப்பட்டிருந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் தொடர்ந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை மட்டும் மாநகராட்சி ஊழியர்கள் இதுவரை அகற்றாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பி மேயர் கவிதா கணேசன் வாட்ஸ் அப் வழியாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருந்தார்.

இதன் காரணமாக திருமாநிலையூர் ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த அண்ணாமலை நடைப்பயண பிரச்சார பிளக்ஸ் பேனர் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. இதேபோல் அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரின் இறப்புக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பேனரும் அகற்றப்பட்டது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி