பரபரப்பான சாலையில் மின் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்ட சாக்கடை நீர் ; நோய் தொற்றும் அபாயம்… வாகன ஓட்டிகள் அதிருப்தி!!

Author: Babu Lakshmanan
23 November 2022, 7:48 pm

கரூர் ; கரூர் அருகே வாகன போக்குவரத்து அதிகமுள்ள சாலையில், மின்மோட்டார் வைத்து சாக்கடை நீர் வெளியேற்றப்பட்ட சம்பவம் நோய் தொற்றும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

கரூர் பேருந்து நிலையம் அரிஸ்டோ கார்னர் பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாக்கடை வடிகால் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த இடத்திலேயே மீண்டும் கான்க்ரீட் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சாக்கடை கழிவுநீரை அனைத்து வாகனங்களும் செல்லும் இடங்களிலேயே மின் மோட்டர் வைத்து வெளியேற்றப்படுகிறது. இது பொதுமக்களுக்கு நோய் ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க ஜே.சி.பி இயந்திரம் கொண்டு சாக்கடை கழிவு நீர் இரைக்கப்பட்ட காட்சிகளும், மின் மோட்டார் வைத்து கழிவு நீர் வெட்ட வெளியில் தார்சாலையில் பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் இடத்தில் சாக்கடை நீர் இரைக்கப்படுவதும் வாகன ஓட்டிகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கழிவு நீர் தொட்டியில் விழுந்து 4 பேர் விழுந்து இறந்த சம்பவம் அடங்கி முடிவடைவதற்குள் இந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!