கரூர் : கரூரில் செய்யாத பணியினை செய்ததாக கூறி பணம் பெற்று விட்டு தற்போது அந்த ஊழலை மறைக்க மீண்டும் பணிகள் ஜரூராக நடந்து வருவதாக அதிமுகவினர் மாவட்ட ஆடசியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் Sankaranand Infra , Contractor Karur என்ற கட்டுமான நிறுவனம் கரூர் நெடுஞ்சாலை துறையில் பல இடங்களில் சாலை பராமரிப்பு டெண்டர் எடுத்து அந்த பணியை செய்யாமலேயே செய்ததாக கூறி கரூர் நெடுஞ்சாலை துறை Divisional Engineer சத்திய பாமா அவர்களின் துணையுடன் அரசு பணத்தை கொள்ளையடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஊழல் சம்பவம் தொடர்பாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதாரப்பூர்வமாக கடந்த 05.04.2022 அன்று விரிவான விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி , கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தார். மேலும் அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுலவலர் அவர்களிடம் நேரில் சென்று மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் இதை தெரிந்து கொண்டு எப்படியாவது இந்த ஊழல் சம்பவத்தில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கரூர் நெடுஞ்சாலை துறை Divisional Engineer அவர்களின் உதவியோடு , Sankaranand Infra , Contractor Karur என்ற நிறுவனம் சாலை பராமரிப்பு வேலைகளை விசாரனையில் உள்ள சம்மந்தப்பட்ட இடங்களில் செய்து வருகின்றனர் .
எனவே பராமரிப்பு வேலைகளை நிறுத்த சொல்லி 06.04.2022 அன்று புகார் மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) அவர்களிடம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருவிகா அவர்கள் மனு அளித்து இருந்தார். ஆனால் , புகார் மனு நிலுவையில் உள்ள போது ஊழல் சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள தடயங்களை அளித்து வருகின்றனர். அதனால் மேற்கண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அவர்களிடம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் அதிமுகவினர் மனு அளித்தார்.
உடன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுப்பிரமணி, கரூர் ஊராட்சி மன்ற ஒன்றிய குழு பெருந்தலைவர் பாலமுருகன், கரூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா சுப்பராயன், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசுதன், 11 வது வார்டு கவுன்சிலர் ஆண்டாள் தினேஷ் குமார், வழக்கறிஞர் கரிகாலன், அதிமுக நிர்வாகிகள் அருண் தங்கவேல், ஆயில் ரமேஷ், நீலிமேடு பிரபாகரன், கராத்தே ராமதாஸ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உடனிருந்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.