திருமணம் செய்யச் சொல்லி டார்ச்சர்… கள்ளக்காதலியை கழுத்தை நெறித்து கொன்ற வடமாநில இளைஞர் கைது…!!!
Author: Babu Lakshmanan8 January 2024, 8:58 pm
கரூர் ; வேலாயுதம்பாளையம் அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியா பயோ எனர்ஜி தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு பெண் உட்பட ஐந்து ஆண்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், அசாம் மாநிலத்தை சார்ந்த சின்தோமணி போரோ (44 வயது). இவர் தனது இரண்டு மகன்களுடன் 20 நாட்களாக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சார்ந்த சுபோல் முர்மோ (32 வயது) ஆகியோர் கிடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் நிறுவனத்திற்கு அருகே மது அருந்தி கொண்டிருந்த போது, சுபோல் முர்மோ அசாம் மாநிலத்திற்கு செல்வதாக கூறியுள்ளார். அதற்கு சின்தோமணிபோரோ என்ற பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மதுபோதையில் பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளார்.
காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பெண்ணின் சடலத்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுப்பதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சுபோல் முர்மோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த பெண்ணின் உடல் இந்த கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.