வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்… சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் ; அவசர வழக்காக விசாரிக்க முறையீடு..!!

Author: Babu Lakshmanan
27 May 2023, 4:51 pm

கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் அமைச்சரின் சகோதரர் இல்லத்தில் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளை சிறைபிடித்து திமுகவினர், அவர்களையும் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர்கள் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த அந்த மனுவில், 9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டு, அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும், மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 401

    0

    0