கரூரில் அதிமுக சார்பில் களமிறங்கிய 23 வயதான பட்டதாரி இளம்பெண் : கட்சியினரோடு சேர்ந்து சென்று வேட்புமனு தாக்கல்!!

Author: Babu Lakshmanan
4 February 2022, 8:20 pm

கரூர் : கரூரில் பேரூராட்சி வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக 23 வயதான பட்டதாரி இளம்பெண் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவரம் பேரூராட்சியில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். நங்கவரம் பேரூராட்சி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 23 வயதான பட்டதாரி பெண் தமிழ்ச்சோலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு உற்சாகமாக அவரை வரவேற்று அளித்தனர். தனது வேட்புமனுவை நங்கவரம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரயிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்ச்சியில் 18-வது பேரூர் கழக செயலாளர் திருப்பதி, பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னிலையில் மருதூர் 15வது வார்டு குளித்தலை யூனியன் சேர்மன் டி.டி.விநாயகம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திருநாவுக்கரசு முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1214

    0

    0