மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
9 August 2022, 1:41 pm

கரூர் : மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,67,381 கனஅடி நீர் வந்தவனம் உள்ளது. கதவணையில் இருந்து காவிரியில் 1,66,261 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும், கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால்,தென்கரை வாய்க்கால் என நான்கு பிரதான வாய்க்கால்களில் விவசாய பாசனத்திற்காக 1,120 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

எனவே, காவிரி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிளை வாய்க்கால்களில் கரையோரம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு போகும்போது கவனத்துடன் இருக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!