சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் : பெற்றோர் அளித்த புகாரால் போக்சோ வழக்கில் போலீசார் அதிரடி..!!

Author: Babu Lakshmanan
22 January 2022, 4:54 pm

கரூர் : கரூர் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்ட வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அரிசனதெரு பகுதியை சேர்ந்தவர் திருமால் மகன் ராகுல் என்கின்ற ஹரிஹரன் (23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் 17 வயதான சிறுமி ஒருவரை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகத்தின் பெயரில் அச்சிறுமியின் பெற்றோர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் சிறுமி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ராகுல் சிறுமியை கடத்தி சென்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது உறுதியானது. இதையடுத்து சிறுமியின் மாயமான வழக்கு பிரிவை மாற்றி குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் ராகுலை குளித்தலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகுல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…