பக்கத்து வீட்டு சிறுமியிடம் சில்மிஷம்… 55 வயது வழக்கறிஞர் போக்சோவில் கைது ; போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

Author: Babu Lakshmanan
17 March 2023, 2:36 pm

கரூர் ; குளித்தலை அருகே இனுங்கூரில் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக வழக்கறிஞரை கைது செய்த குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த இனுங்கூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பழனியப்பன் (55). திருமணமான இவர், திருச்சி மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தி வருகிறார். இவர் கடந்த 15 ஆம் தேதியன்று இனுங்கூரில் வீட்டில் இருந்தபோது, அருகேயுள்ள வீட்டில் வசிக்கும் 3 வயது சிறுமி வீட்டுக்குள் வந்துள்ளார்.

அப்போது, பழனியப்பன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பழனியப்பன் மீது போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து, கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 457

    0

    0