தோப்பு வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி… கொடூரமாக சிதைக்கப்பட்ட உடல் ; கரூரில் திடுக்கிட வைத்த சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
22 May 2023, 11:52 am

கரூர் அருகே மாந்தோப்பில் கணவன், மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த ஓடையூர் பகுதியில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கடந்த 15 வருடங்களாக தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, கணவன் மனைவியான தங்கவேல் (65), தைலி (61) ஆகிய இருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை தோட்டத்து வீட்டில் தம்பதியர் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தலை மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூதாட்டி அணிந்திருந்த நகை காணாமல் போனதால், நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர், மோப்பநாய் உதவியுடன் வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 527

    0

    0