ஆஃபரில் செல்போன் வேண்டுமா…? ஆன்லைனில் ரூ.7 லட்சம் மோசடி.. 2 பேரை கைது செய்து சைபர் கிரைம் போலீஸ் அதிரடி

Author: Babu Lakshmanan
29 April 2022, 9:04 am

கரூர் : ஓமன் கஸ்டம்ஸில் இருந்து பேசுவதாக கூறி 7 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 2 பேரை கரூர் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்தது. அதில், கடந்த 03.02.2022ம் தேதி ஃபேஸ்புக்கில் செல்போன் விற்பனை என்ற விளம்பரத்தைப் பார்த்து லிங்கை ஒருவர் கிளிக் செய்துள்ளார். அப்போது அதில் வரும் வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு செல்போனை ஆர்டர் செய்த போது, ஓமன் கஸ்டம்ஸ் மற்றும் காவல்துறையில் பேசுவதாக கூறி ஒருவர் மிரட்டியுள்ளார்.

மேலும், தன்னை ஏமாற்றி ரூ.7,01,900 பணம் பெற்று ஏமாற்றியதாகவும், அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டது. மேலும் புகார் மீது விசாரணை மேற்கொண்டு வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்ததில், இஷா பகதூர் மால்சம் மற்றும் சுராஜித் டெபர்மா ஆகியோர் குற்றச் செயலில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் அம்சவேணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு, மிரட்டி ஏமாற்றி பணமோசடி செய்த இரண்டு நபர்களையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…