அடிபம்பு மேல் கான்க்ரீட் அமைத்த ஒப்பந்ததாரர் ; கண்டுகொள்ளாமல் திறப்பு விழா நடத்திய திமுக எம்எல்ஏ… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
10 June 2023, 3:51 pm

கரூரில் அடிபம்பு மேல் கான்க்ரீட் அமைத்த ஒப்பந்ததாரரின் செயலை மறந்து, படிக்கட்டுத்துறையையும் திமுக எம்எல்ஏ திறந்து வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் மேளக்காரத்தெரு மக்களின் பயன்பாட்டிற்காக ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் தென்கரை வாய்க்காலில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் படிக்கட்டுத்துறை கட்டும் பணியும், அதனுடன் இணைப்பு சாலையும் காட்டப்பட்டது.

அதில் ஏற்கனவே இருந்த அடிபம்பு ஒன்று இருந்த நிலையில், அதனை அகற்றியோ அல்லது அதனை மறுசீரமைத்தோ அல்லது அதனை தவிர மற்ற இடத்தில் கான்கிரீட் போட வேண்டும். ஆனால், அந்த அடிபம்பு மீது கான்கிரீட் போட்டு அடிபம்புவில் குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத அளவிற்கு கான்க்ரீட் போட்டுள்ள ஒப்பந்ததாரர் செயல் மிகவும் வைரலாகி வருகின்றது.

மேலும், அந்த கான்க்ரீட் சாலையையும், படிக்கட்டுத்துறையையும் அத்தொகுதியின் திமுக எம்.எல்.ஏ சிவகாம சுந்தரி திறந்து வைத்த சம்பவம் மேலும் பேசும் பொருளாகவே மாறியுள்ளது

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!